கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து தீவீரமுக்கோணம் அருகே உண்ணாமலை இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாத இடத்தில் உண்ணாமலை கணவரின் அண்ணன் மகனான குமார் மற்றும் அவர் மனைவி கல்பனா மற்றும் உறவினர்கள் சேர்ந்து டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டனர்.
அப்பொழுது தனது மகன் இல்லாத சமயத்தில் இது போன்று செய்யக்கூடாது என்று உண்ணாமலை அவர்கள் கண்டித்த நிலையில் உண்ணாமலையே அங்க இருக்கக்கூடிய மரத்தில் கட்டிவைத்து அவர் கண்முன்னயே அந்த நிலத்தில் உளுந்து உள்ளனர். இது சம்பந்தமான வீடியோ நேற்று வெளியான நிலையில், போலீசார் இதன் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்ணாமலை உறவினர்கள் குமார், கல்பனா, பிரபாகரன் ஆகிய மூவரை காவேரிப்பட்டிணம் போலீசார் கைது செய்துள்ளனர்.
