கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நிலப் பிரச்சனையில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பட்டிணம் அருகே மூதாட்டி உண்ணாமலையை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மூதாட்டியை தாக்கிய உறவினர்கள் குமார், கல்பனா, பிரபாகரன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
