கொல்கத்தா: எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. திருத்த பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில். 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், மேற்குவங்கத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை, பெரும்பாலான மக்களின் வாக்குரிமையை பறிக்கிறது. இதனால் நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். எஸ். ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் செயல்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துவதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
