இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜன.5: தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடு கடத்தியுள்ளது. இச்சம்பவததை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் ராமகிருஷ்ண பாண்டே, மாநில செயலாளர் வீரபாண்டியன், புதுச்சேரி மாநில செயலாளர் முகமது சலீம் கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்தரசன், நாகப்பட்டினம் எம்.பி., செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ., மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில துணை செயலாளர்கள் ரவி, பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: