காவேரிப்பட்டணம், ஜன.5: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் வன்னியர் குல சத்திரியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், வருகிற ஜனவரி 17ம் தேதி, 148ம் ஆண்டு பாரம்பரிய வடமாடு எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வருவாய்த்துறை சார்பில் சப் கலெக்டர் ஷாஜகான் தலைமையில், கள ஆய்வு நடந்தது.
இதில் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர், தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை துணை அலுவலர், காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், விழா குழுவின் சார்பில், தலைவர் ஊர் கவுண்டர் மகேந்திரன், பூபாலன், சார்லஸ், சின்னசாமி, தக்காளி தவமணி, குமரேசன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், குணா, நல்லாசிரியர் பவுன்ராஜ், கவுரன், சந்தோஷ், பிரபாகரன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
