×

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

 

திருவள்ளூர், ஜன.5: பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளரும் சிறுபான்மையினர் மற்றும் அயலக தமிழர் நலன்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்படி, ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளரும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி மேற்பார்வையிலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலேஷ் தலைமையில் பூந்தமல்லி தொகுதி பார்வையாளர் செல்வராஜ் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒன்றிய துணைச் செயலாளர் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், வழக்கறிஞர்கள் அருண்குமார், பிரகாஷ், கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், பச்சையப்பன் என்கிற வினோத், கிருஷ்ணன், அரிகிருஷ்ணன், நடேசன், சுபாஷ், மதன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தர் உடன் இருந்தனர்.

Tags : Thiruvallur ,Kattupakkam panchayat ,Poonamalli ,DMK District ,and Neighboring ,Tamil Welfare Minister ,Avadi S.M. Nassar ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவு...