சென்னை: ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்திட ஆணையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணையிட்டார்.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றியமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, நர்சுகள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு பல்கலை கல்லூரி எஸ்.சி./எஸ்.டி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கல்வித்துறை தட்டச்சர்கள் சங்கம், தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை துணைச்செயலாளர் (வரவு செலவு) பிரத்திக் தாயள், குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
