புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் வரவேற்பு: காலவரையற்ற போராட்ட அறிவிப்பு வாபஸ்

சென்னை: ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், அமிர்தகுமார் ஆகியோர் கூறியதாவது: 23 ஆண்டு கால ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் எதிர்பார்த்தது போன்று வழங்கியமைக்கு முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 50% ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி. முதல்வரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பு பெருமகிழ்வோடு வரவேற்று நன்றி தெரிவிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஜனவரி 6ம் தேதி முதல் நடக்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: