தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாக பிரம்ம மகோற்சவ சபா சார்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் 179வது ஆராதனை விழா நேற்று (3ம்தேதி) மாலை தொடங்கியது. சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், இந்த ஆராதனை விழா என்பது இந்திய எல்லை கோடுகளை எல்லாம் தாண்டி உலகம் முழுவதிலும் சிறந்த இசை விழாவாக உருவெடுத்திருக்கிறது.
நான் அறிந்தவரை இந்தியாவிலே எந்த ஒரு இசை நிகழ்விற்கும் 5 குடியரசுத் தலைவர்கள் பங்கு பெற்றதாக சரித்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 2400 கீர்த்தனைகள் படைத்த ஒரே மகான் இருக்கிறார் என்று சொன்னால் அது தியாகராஜ சுவாமிகள் மாத்திரம் தான். எனவே தான் சங்கீத மும்மூர்த்திகள் என்பவர்கள் மூவராக இருந்தாலும் கூட அவர்களில் தல நாயகராக தியாகராஜ சுவாமி கருதப்படுகிறார். எனவே அவருக்கு ஆராதனை செய்வதன் மூலமாக நாம் இறைவனை தொழுகிறோம். இவ்வாறு அவர் பேசினார். நேற்று சீர்காழி சிவசிதம்பரம், பாடகி மகதி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
