×

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம். தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!

 

Tags : Veeramangai Velunachiyar ,Veerapandiya Katpomman ,K. ,Stalin ,Chennai ,Veerapandiya Katbomman ,Tamil Nadu ,K. Stalin ,India ,
× RELATED தமிழ்நாட்டில் ஜன.7ம் தேதி வரை அதிகாலை...