×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது பவுன்: வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 எகிறியது

சென்னை, ஜன.3: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது. வெள்ளியும் போட்டிப் போட்டு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் அதிகரித்தது. கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800க்கு விற்பனையாகி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்கம் அதிகரிக்குமோ என அவர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

ஆனால், திடீரென தங்கம் விலை குறைய தொடங்கியது. அதாவது, கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை குறைவு என்பது இருந்து வந்தது.29ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,160க்கும், 30ம் தேதி பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு 800க்கும், 31ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,840க்கும் விற்றது.

தொடர்ந்து 2026 ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினமும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. அதாவது நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், பவுனுக்கு ரூ.320, குறைந்து ஒரு பவுன் ரூ.99,520க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுனுக்கு ரூ.5,280 குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் அளித்தது.

அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிக இறக்கம்தான். இனிவரும் நாட்களிலும் இப்படி ஏற்றம், இறக்கம் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் கூறியிருந்தனர். அதற்கு ஏற்றார்போல் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. அதாவது, தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது.

நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,00,640க்கும் விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை!