வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.1,739.50 ஆக இருந்தது ரூ.1,849.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

டெல்லி, கொல்கத்தா போன்ற பல நகரங்களிலும் விலை ஏற்றப்பட்டுள்ளது. இது உணவகங்களில் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும், தேநீர், காபி விலையேற்றத்திற்கும் காரணமாக அமையும். எனவே, இந்த விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: