சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிறுகுளத்தில் நத்தத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணனுக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு ரகசியமாக செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுக்கு தேவையான கருந்திரி தயாரித்து வந்துள்ளனர்.
நேற்று இயந்திரத்தின் மூலம் பட்டாசு திரி தயாரிக்கும் பணியில் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷபிகுல் அலி(14), ஷகில் உசேன்(15) ஆகிய இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
