விஜய் கட்சிக்கு கூட்டம் கூடுவதை பார்க்கவில்லை: அடித்து சொல்லும் அண்ணாமலை

வேலூர்: வேலூர் அடுத்த ஊசூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டையில் 4ம் தேதி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்பதை முடிவெடுக்க மாநிலத் தலைவர் இருக்கிறார். அகில இந்திய தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முடிவெடுப்பார்கள். நயினார் நாகேந்திரன் கட்சி அளவில் 53 மாவட்டத்திற்கு நடை பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அந்த பயணத்தில் நானும் பங்கேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் கட்சிக்கு கூட்டம் வருவது குறித்து கேட்டதற்கு, ‘நான் எந்த மாநாட்டிற்கும் போகவில்லை. எதையும் பார்க்கவில்லை. எல்லா தலைவர்களும் அவங்க அவங்க கூட்டம் போடட்டும். பிடித்தவர்கள் வந்து பார்க்கட்டும், கேட்கட்டும். அவர்கள் முடிவு எடுக்கட்டும். இவிஎம் மிஷனில் சொந்தமாக யோசித்து தமிழகத்தை யார் மாற்றுவர்கள் என்று அவர்கள் வாக்களிக்கட்டும். தொடர்ந்து நாங்கள் சொல்வது தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: