த.வெ.க.வில் இணைந்த மாஜி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: 2011 சட்டசபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜே.சி.டி.பிரபாகர். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர். இந்நிலையில் அவர் நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னதாக, அதிமுகவில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அப்போது அவர், பொங்கலுக்கு முன்பு பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தவெகவில் ஜே.சி.டி.பிராபகர் இணைந்திருப்பது ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் இணைந்துள்ள ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை, தற்போது விஜய்யை சந்தித்தபோது என்னால் பெற முடிந்தது. கட்சி பொறுப்பு எதுவும் தரவில்லை என்றாலும், மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவில் இணைந்தேன். அதிமுக ஒருங்கிணைப்புக்கு முயன்றேன். அது பலன் அளிக்கவில்லை. இனி அந்த முயற்சி வெற்றிபெறாது. வரும் நாட்களில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள். தமிழ்நாட்டில் விஜய்க்கு ஆதரவு இருக்கிறது’ என்றார்.

Related Stories: