மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20ஐ என மூன்றுவித போட்டிகளிலும் கடந்த ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக எண்ணிக்கையில் சிக்ஸர் அடித்து சாதனை படைத்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணி வீரரான டிவால்ட் பிரெவிஸ் 32 இன்னிங்ஸில் 65 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய வீரரான அபிஷேக் சர்மா 21 இன்னிங்ஸில் 54 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான ஷாய் ஹோப் 50 இன்னிங்ஸில் 54 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக் 45 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் 26 இன்னிங்ஸில் 45 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரரான டான்சித் ஹசன் 34 இன்னிங்ஸில் 44 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரரான சைஃப் ஹாசன் 21 இன்னிங்ஸில் 40 சிக்ஸர்களை அடித்து, இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
