5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்

நியூயார்க்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் வைல்ட் கார்ட் மூலம் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குகிறார். டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை மெல்போர்ன் நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ், வீல்சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45) 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விளையாட உள்ளார். 7 முறை கிராட்ண்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் களமிறங்குகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிடும் விளையாடுவதன் மூலம் மிக வயதான பெண் வீரராக வரலாறு படைப்பார். இதற்கு முன் ஜப்பானின் கிமிகோ டேட் 44 வயதில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: