- பஞ்சப்பள்ளி அணை
- தரும்புரி
- தாரம்பூரி மாவட்டம்
- பாலக்கோடு வட்டம்
- பஞ்சப்பள்ளி கிராமம்
- சின்னாரு நீர்த்தேக்கம்
- பசாலி
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கம் 2025-2026 (பசலி 1435) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 05.01.2026 முதல் 24.05.2026 வரை மொத்தம் 140 நாட்களுக்கு 473.09 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டுகளின் மூலம் 1. பஞ்சப்பள்ளி, 2. பெரியானூர். 3. போடிகுட்டப்பள்ளி, 4. சாமனூர், 5. அத்திமுட்லு, 7. குஜ்ஜாரஅள்ளி, 8. கொலசனஅள்ளி, 9. பி.செட்டிஅள்ளி, 10. ஜெர்த்தலாவ், 11. பாலக்கோடு, 12. எர்ரனஅள்ளி, 13. பேளாரஅள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள 4500.00 ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறும்.
