பாஸ்டேக் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் புதிய விதிகள் வரும் பிப்.1 முதல் அமல் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!

டெல்லி : பாஸ்டேக் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் புதிய விதிகள் வரும் பிப்.1 முதல் அமலுக்கு வருகின்றன. பாஸ்டேக் பெற KYV(Know Your Vehicle) நடைமுறை இனி அவசியமில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கார்கள், ஜீப்புகள், வேன்கள் உள்ளிட்ட இலரக வாகனங்களுக்கான பாஸ்டேக் பெற KYV தேவையில்லை. KYV நடைமுறையால் ஏற்படும் தாமதம், சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு விதிகளை திருத்தி NHAI (தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ) உத்தரவிட்டது. ஏற்கனவே பாஸ்டேக் பெற்ற வாகனங்களுக்கு KYV சரிபார்க்கத் தேவையில்லை என்றும் NHAI உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட செய்தியில், “வாகன உரிமையாளர்களுக்கு தவறாக வழங்கப்பட்ட FASTag-க்கு மட்டுமே இனி KYV அவசியமாகும்.புகார்கள், முறைகேடுகள் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு KYV நடைமுறை தேவைப்படும். VAHAN தரவு தளத்தில் வாகனங்களின் விவரங்களை சரிபார்த்த பின்பே புதிய பாஸ்டேக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டும். FASTag-ஐ ஆக்டிவேட் செய்த பின்பு தரவு தளத்தில் உறுதி செய்யும் நடைமுறையும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. VAHAN தளத்தில் இல்லாத வாகனங்களுக்கு வங்கிகள் ஆர்.சிபுக்-ஐ சரிபார்த்த பின்பு பாஸ்டேக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆன்லைனில் வாங்கப்படும் பாஸ்டேக்களுக்கும்  VAHAN தரவு தளத்தில் வாகன விவரங்களை சரிபார்க்க வேண்டும். புதிய நடைமுறை மூலம் பாஸ்டேக் பெறுவது மிக எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: