லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து லாகூரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடா பகீர் டி குல்லி பகுதியில் நிகழ்ந்தது.
அங்குள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வீரர்கள் பஸ்சில் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த பயணிகள் வேன் அதன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 25 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
