பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கோவை: கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் பேருந்து முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் எப்போதும் போல நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வேலந்தாவளம் செல்லும் தனியார் பஸ் ஒன்று வெளியே வந்தது. அப்போது காந்திபுரம், காட்டூர் போலீஸ் நிலையம் முன்பு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்று இருந்தார்.

அவர் திடீரென ஓடிச் சென்று அந்த பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்தார். அதில் அந்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: