சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், சென்னையில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். முன்னதாக மக்கள் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். நாளை, வேலூரில் உள்ள தங்கக் கோவிலில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
அன்று பிற்பகல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் 9-வது சித்தா தின கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்.அதன்பின்னர் அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இரு நாட்களுக்கு முன்னர் அவர் 2 நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்தார். தற்போது சென்னைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
