×

புத்தாண்டின் முதல் நாளில் முழு கொள்ளளவுடன் புழல் ஏரி

புழல்: கடந்தாண்டு இறுதியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழுமையாக நிரம்பி, அதன் உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை ஓய்ந்ததும், தற்போது வரை புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிக்கு தொடர்ந்து 215 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 24வது நாட்களாக புழல் ஏரி முழுவதுமாக நிரம்பி, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் வரை முழு கொள்ளளவுடன் நீடித்து, கடல் அலை போல் நீர் ததும்பி அழகுற காட்சியளித்து வருகிறது. இதன்மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு துவக்கத்தின் முதல் நாளில் புழல் ஏரி முழு கொள்ளளவுடன் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை