×

“என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026ல் அடியெடுத்து வைக்கிறேன் ”: விராட் கோஹ்லி நெகிழ்ச்சி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி. 37 வயதான இவர் டெஸ்ட் மற்றும் டி.20 போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள்தொடருக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் 2025ம் ஆண்டு முடிந்து 2026ம் ஆண்டு பிறந்துள்ளது.இதனை உலகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்தியாவில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. புத்தாண்டையொட்டி விராட் கோஹ்லி , மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்க்கையின் ஒளியுடன் 2026ல் அடியெடுத்து வைக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தில் கோஹ்லியின் முகத்தில் பாதி பக்கம் ‘ஸ்பைடர்மேன்’ போலவும், அனுஷ்கா சர்மாவின் முகத்தில் அழகான ‘பட்டாம்பூச்சி’ போலவும் ஃபேஸ் பெயிண்டிங் செய்துள்ளனர். இந்தபடம் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன் லைக்குகள் குவிந்து வருகின்றன. 10 மணி நேரத்தில் 90லட்சத்து 42,471 லைக்குகள் குவிந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 28ஆயிரம் ரன் மைல்கல்லை எட்ட கோஹ்லிக்கு இன்னும் 25 ரன்களே தேவை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் இலக்கை எட்டி அதிவேகமாக இந்த மைல்கல்லைஎட்டிய வீரராக டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க உள்ளார். டெண்டுல்கர், சங்ககரா ஆகியோர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம்ரன்னைதாண்டி உள்ளனர். டெண்டுல்கர் 644 இன்னிங்சிலும், சங்ககரா 666 இன்னிங்சிலும் 28ஆயிரம்ரன்னை அடித்தனர். கோஹ்லி 623 இன்னிங்சில் 27,975 ரன் அடித்துள்ளார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது வருங்கால மனைவி வன்ஷிகாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.

Tags : Virat Kohli ,Mumbai ,cricket team ,Tests ,T20s ,New Zealand ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...