கொல்லம் : சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு நடைபெறும் கொல்லம் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவில் இருந்து தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட கதவு, சிலைகள் மட்டுமின்றி சன்னிதானத்தின் மேலும் பல இடங்களில் தங்கம் திருட்டு என்று எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.
