×

சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை :சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும் சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...