சேலம், ஜன.1: சேலம் சிவதாபுரம் அடுத்த முருங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மாது (67). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருங்கப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சேலத்திலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்ற டூவீலர், மாது மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த மாதுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மாது உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
