×

அரியானாவில் கொடூரம் ஓடும் வேனில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சாலையில் வீசி சென்ற அரக்கர்கள், 2 பேர் கைது

ஃபரிதாபாத்: அரியானாவை சேர்ந்த திருமணமான 25 வயது பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தன் தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தன் தோழி வீட்டுக்கு சென்று விட்டு, இரவில் தாமதமாக வந்த அந்த பெண், சாலையில் வாகனத்துக்காக காத்திருந்தார். அப்போது வேன் ஒன்றில் வந்த இளைஞர்கள் அந்த பெண்ணுக்கு லிஃப்ட் தருவதாக கூறி, ஏற்றி சென்றுள்ளனர். ஆனால் ஓடும் வேனிலேயே இளைஞர்கள் இருவரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு எஸ்.ஜி.எம். நகரில் உள்ள ராஜா சவுக் அருகே, ஓடும் வேனில் இருந்து பாதிக்கபட்ட பெண்ணை தூக்கி வீசி சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண் தன் சகோதரியை தொடர்பு கொண்டு தகவல் சொன்னவுடன், சம்பவ இடத்துக்கு வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பலத்த காயமடைந்த பெண், கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் சகோதரி காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பெண்ணின் உடல்நிலை சீராக இருந்தாலும், வாக்குமூலம் தரும் நிலையில் பெண் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஃபரிதாபாத்தில் வசிக்கும் இரண்டு பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Tags : Haryana ,Faridabad ,
× RELATED டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட...