சென்னை: சிபிஎஸ்ஐ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கும். அதன்படி 2026ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுகள் தொடங்கும் தேதியை தற்போது சிபிஎஸ்இ மாற்றி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களை முன்னிட்டு மார்ச் 2026 3ம் தேதி நடக்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10ம் தேதியும் நடக்கும்.
மற்ற தேர்வு தேதிகள் மாற்றமின்றி குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும். இதுகுறித்து மாணவர்கள், பெற்றோருக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கைகளை பள்ளிகள் எடுக்க வேண்டும். தேர்வு அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட தேதிகள் ஹால்டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்படும்.
