- சென்னை சிறப்பு நீதிமன்றம்
- சென்னை
- கிருஷ்ணவேணி
- பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை
- தண்டையார்பேட்டை தாலுகா
- ஹரிஹரன்
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (60). இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் 2014 அக்டோபரில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ஹரிஹரன் (43) சான்றிதழ் வழங்க லஞ்சமாக ரூ.30,000 கேட்டுள்ளார். பின்னர் ரூ.5 ஆயிரம் குறைத்து கேட்டுள்ளார்.
இதையடுத்து, கிருஷ்ணவேணி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி நவம்பர் 18ம் தேதி லஞ்சப் பணத்தை கிருஷ்ணவேணி கொடுத்த போது ஹரிஹரனை போலீசார் கைது செய்து ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன், குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் ஹரிஹரனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
