சென்னை: சென்னைக்கு மிக முக்கிய பிரமுகர் வருவதால் சென்னை பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள் உள்பட ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை ெசய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
நாளை மற்றும் 3ம் தேதிகளில் விவிஐபி சென்னைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் பெருநகர் சென்னை காவல் எல்லைக்குள் விவிஐபி பயணிக்கும் பாதைகள் ஆகியவை “சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரசு ஏற்பாடுகளை தவிர நாளை மற்றும் 3ம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழும், 2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14-ன் உட்பிரிவு (2) கீழும், டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட கடந்த 21ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் ேததி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
