×

ஜேஇஇ பிரதான தேர்வு விவரம் வெளியிட்டது ரூர்க்கி ஐஐடி

சென்னை: ஜேஇஇ பிரதான தேர்வு தொடர்பான விவரங்களை தேர்வை நடத்தும் ரூர்க்கி வெளியிட்டுள்ளது.  நாடு முழுவதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இருகட்டமாக நடத்தப்படும்.

அதன்படி 2026ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரையும், ஏப்ரல் 1 முதல் 10ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு மே 17ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பாணையை இத்தேர்வை நடத்தும் ரூர்க்கி ஐஐடி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 23 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும்.

மேலும், விண்ணப்ப கட்டணத்தை மே 4ம் தேதி வரை செலுத்தலாம். ஜேஇஇ பிரதான தேர்வு 2 தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். மேலும், விண்ணப்பக் கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று ரூர்க்கி ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : IIT Roorkee ,Chennai ,Roorkee ,JEE ,
× RELATED கொடுத்த வாக்குறுதி, கடமையிலிருந்து...