×

10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த பொருளாதாரம்: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

டெல்லி: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தற்போதைய வேகம் தொடர்ந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை மிஞ்சி இந்தியா 3வது இடத்தை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையின்படி வளர்ச்சி அளவுகளை ஒன்றிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தியா உலக அளவில் 4வது இடத்தில உள்ளது. ஜப்பானின் பொருளாதாரமும் 4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கல் என்ற நிலையில் இருந்தாலும் 2025-26 நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் இந்தியா 8.2 சதவீதம் என்ற அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜப்பானின் வளர்ச்சி விகிதம் குறைவாக சுமார் 0.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனால் இந்தியா ஜப்பானை முந்திவிட்டதாக சர்வதேச பொருளாதார நிதியம் தெரிவித்துள்ளது. 2030க்குள் இந்தியா ஜெர்மனியையும் முந்தி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை ஜப்பான் இந்தியாவை விட பல மடங்கு முன்னிலையில் உள்ளது. ஜப்பானியர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.31 லட்சம் வருவாய் ஈட்டுகிறார்கள். இந்தியர்களின் ஆண்டு வருமானமோ சராசரியாக ரூ.2,63,000 மாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை விவசாயம் மிக பெரிய துறையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேக் இன் இந்தியா மூலம் உற்பத்தி துறையை வலுப்படுத்தி வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகளில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ், வங்கி, காப்பீடு தொழில்நுட்ப துறைகளில் உலக அளவில் நம்பர் ஒன் நாடக திகழ்கிறது ஜப்பான். இந்தியாவை பொறுத்தவரை வலிமையாக கருதப்படுவது அதன் இளம் மக்கள் தொகை இந்தியாவின் சராசரி வயது 28 ஜப்பானின் சராசரி வயது 49 ஜப்பான் மக்கள் தொகையில் 29சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதனால் அங்கு தொழிலாளர் பற்றாக்குறையும் சுகாதார செலவுகளும் அதிகரித்துள்ளன. உலகின் மிக சிறந்த உள்கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகளில் ஜப்பான் முக்கியமானது. அங்கு அதிவேக ரயில்கள், நவீன துறைமுகங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

இந்தியா தற்போது உள்கட்டமைப்பை மேம்படுத்த 1.4 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான கதி சக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் புல்லட் ரயில் திட்டங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பொதுக்கடன் அதன் GDPல் சுமார் 85 சதவீதம் வரை உள்ளது. உலகின் மிக உயர்ந்த கடன் சுமை கொண்ட நாடுகளில் ஒன்று ஜப்பான். அந்நாட்டின் கடன் விகிதம் சுமார் 260சதவீதம் இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு சுமார் 62.94 லட்சம் கோடி. ஜப்பானின் செலாவணி இருப்பு ரூ.107.87 லட்சம் கோடி. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தற்போதைய வேகம் தொடர்ந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை மிஞ்சி இந்தியா 3வது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Japan ,Delhi ,EU government ,Germany ,
× RELATED குடியரசு தின விழாவில், முதன்முறையாக...