தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்கவேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில்; ஒன்றியத்தில் ஆளும் மோடி அரசு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் குறிப்பாக நதிநீர்ப் பிரச்சனைகளில் கடந்த ஆண்டுகளில் மன்னிக்க முடியாத வஞ்சிசகத்தையும், துரோகத்தையும் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மக்களாட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் விதத்தில் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதோடு, சர்வாதிகார பாசிச ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட இந்துத்துவ சக்திகள் மதவெறியைத் திணித்து இரத்தக் கலறிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாடியுள்ளார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளர்ப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: