சென்னை: சென்னை அயனாவரம் – பெரம்பூர் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது. 861 மீட்டர் தொலைவிலான பணியை வெற்றிகரமாக முடித்தது ‘மேலகிரி’ என்ற இயந்திரம். இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
