சத்தியமங்கலம், டிச.31: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் காலை, மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் அர்ச்சகர் பூஜை முடித்து கோயிலை போட்டுவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று காலை கோயிலுக்குள் சென்று பார்த்த போது கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் தாளவாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
