வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: விஜய் கண்டனம்

சென்னை: திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், மற்றொரு இளைஞரை கொடூரமாக தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது என்ற அச்சத்தையும், அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. அலட்சியத்தையும், பொறுப்பின்மையையுமே இச்சம்பவம் எடுத்து காட்டுகிறது. போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. போதை பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Related Stories: