அமைச்சர் பிறந்த நாள் விழா மடப்புரம் கோயிலில் தங்கரதம் இழுப்பு

திருப்புவனம்,டிச.31: திருப்புவனத்தில் திமுக மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் வாசலில் வைத்து அன்னதானம் மற்றும் கோயிலில் தங்கத் தேர் இழுத்தும் திமுகவினர் கொண்டாடினர். சிவகங்கை மாவட்ட திமுக விவசாயிகள் அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் கடம்ப சாமி முன்னிலையிலும் நடந்தது. இதில் அப்பாச்சாமி, முனைவர் இளங்கோவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் டி.ஆர் சேகர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் யோகேஷ் அம்பலம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காத்தமுத்து, ஏனாதி படித்துறை, பூவந்தி ஆறுமுகம், அல்லிநகரம் சூரப்பன், வழக்கறிஞர் தங்க பாலமுருகன், மடப்புரம் பெரியசாமி. சுப்பிரமணியன், வடகரை செல்வராஜ் ராமச்சந்திரன், அல்லி நகரம் அதிகரை நல்லதம்பி உட்பட திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: