- திராவிட மாதிரி ஊராட்சி
- உதயநிதி ஸ்டாலின்
- கோயம்புத்தூர்
- துணை முதலமைச்சர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கோவை: திராவிட மாடல் அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற உயரிய தத்துவத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றியிருக்கும் திராவிடமாடல் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ 10 கோடியில் Astro Turf வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை இன்று திறந்து வைத்தார்.
இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை போன்று இனி கோவையிலும் நடைபெற இருப்பதில் மகிழ்கிறோம். இந்த ஸ்டேடியத்தை கோவையைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, புதிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன்பின் ஈரோட்டில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் 6000 கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். ஊரகப்பகுதிகளைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 30 வகையான விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம். கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள அனைவரும் அதனை முறையாக பயன்படுத்தி நல்ல உடல் வலிமையும் மன உறுதியும் பெற அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
