*சுதந்திர தொழிலாளர் யூனியன் பொதுக்குழுவில் தீர்மானம்
விகேபுரம் : தாமிரபரணி தவழ்ந்து வரும் பாபநாசம் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது என விகேபுரத்தில் சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விகேபுரத்தில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில தலைவர் கானகத்திமீரான் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் அப்துல் மஜீத் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அமீர் பாதுஷா உரையாற்றினார்.
மாநில நிர்வாகிகள் முகமது மஹிதீன், நிஜாமுதீன், அப்துல் ரஹீம், ஹபிபுர் ரஹ்மான், மகபூ ஷரீப்,பம்பல் சலீமுத், மாநில துணைத் தலைவர் முகமது இஸ்மாயில், தென்காசி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, மாவட்ட பொருளாளர் சையது மசூத், மாநில வர்த்தக அணி தலைவர் ஹாஜி சையது சுலைமான், தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர், மாநில விவசாய அணி முகமது அலி, தேசிய நிர்வாகிகள் முகமது ஹாரூன், சிஜமீலா, அட்வகேட் ஹனிபா குஞ்சாலி, பீவி பாத்திமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக நெல்லை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ராபர்ட் புரூஸ் எம்பி, திமுக நகர செயலாளர் கணேசன், விகேபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளரும், முன்னாள் எம்எல்வுமான முஹம்மது அபுபக்கர், சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய தலைவர் அகமது குட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தாமிரபரணி தவழ்ந்து வரும் பாபநாசம் பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது, 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
