சென்னை : திமுக ஆட்சி அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 98.23% ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 டிசம்பர் வரை 32,61,153 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 21,09,629 ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
