×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர், டிச.30: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடம் இருந்து 410 கோரிக்கை மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், கலால் உதவி ஆணையர் கணேசன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா, துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Thiruvallur ,People's Reconciliation Center ,Thiruvallur District Collector's Office ,District Collector Pratap ,
× RELATED பெரியபாளையம் முதல் புதுவாயல்...