கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க பெண் எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் நேற்று கோவை வந்தனர். அதேபோல பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மலுமிச்சம்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் கவர்னரும், பாஜ மூத்த தலைவருமான தமிழிசை கவுந்தரராஜனும் கோவை வருகை தந்தார். இவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் வந்தனர். அப்போது விமானத்தில் திமுக பெண் எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டனர். அதோடு முகமலர்ச்சியோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த கனிமொழி, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்று பகிர்ந்துள்ளார். அரசியல் மேடைகளில் கடுமையாக விமர்சித்துக் கொண்டாலும், நேரில் சந்திக்கும் போது காட்டும் இந்த நட்புணர்வை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு ஒரே விமானத்தில் சென்ற திமுக, பாஜ பெண் தலைவர்கள்: ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என கனிமொழி எக்ஸ் தள பதிவு
- திமுக
- பாஜக
- சென்னை
- கோயம்புத்தூர்
- கனிமொழி எக்ஸ்
- கனிமொழி
- தமிழாச்சி தங்கபாண்டியன்
- கானிமோசி சோமு
- திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
- பல்லடம், திருப்பூர் மாவட்டம்
- ஜனாதிபதி
- நைனார் நாகேந்திரன்...
