×

நாலாங்கட்டளையில் ரூ.20 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம் மனோஜ்பாண்டியன் திறந்துவைத்தார்

ஆலங்குளம், டிச.30: கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம் கட்டளை பஞ்சாயத்து நாலாங்கட்டளை கிராமத்தில் மனோஜ் பாண்டியன் தனது சட்டமன்றத் தொகுதி (2025-2026) மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்திருந்த ரூ.20 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை வகித்தார். யூனியன் துணை சேர்மன் மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைகோமதி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், புதிய பல்நோக்கு கட்டிடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி பேசினார். நிகழ்வில் நூர் அமீர்,அரசு ஒப்பந்ததாரர் விஷ்ணு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Manoj Pandian ,Nalangattala ,Alankulam ,Kadayam Panchayat Union Fifth Command Panchayat.… ,
× RELATED அஞ்சலக கணக்குகளை புதுப்பிக்க வாய்ப்பு