×

இல்லம் தேடி வாக்காளர் பதிவு செய்யும் படிவம் பெறலாம் கலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு

வேலூர், டிச. 30: மாற்றுத்திறனாளிகள், மூத்த முடிமக்களுக்கு இல்லம் தேடி வாக்காளர் பதிவு செய்யும் படிவம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தற்போது நடைப்பெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்தம் 2026 வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களால் வாக்கு சாவடி மையம் சென்று படிவம் பெறுவதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் \\\”1950” உதவி மையம் எண் மூலம் தொடர்பு கொண்டு 1950contactcentre@gmail.com மூலம் பதிவு செய்து அவர்களின் பெயர் மற்றும் முகவரி தெரிவிக்கும் பட்சத்தில் வாக்குச்சாவடி அலுவலர் அவர்கள் வீட்டிற்கு வருகை புரிந்து படிங்கள் வழங்கி பூர்த்தி செய்து திரும்ப பெற்று செல்லுவார்கள். எனவே தாங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள அல்லது முகவரி மாற்றம் செய்து கொள்ள இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vellore ,Collector ,Subbulakshmi ,Election Commission of India ,
× RELATED கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை...