திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல நகைக் கடையில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள 1 கிலோ தங்க நகைகளை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.43 கோடி மதிப்புள்ள நகைகளை திருடியதாக ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் சென்றபோது பொறுப்பு மேலாளர் சிவா நகைகளை திருடியது அம்பலமாகியுள்ளது.
