×

ராணுவத்தை அனுப்பி வைக்கிறோம்..அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்த பாகிஸ்தான் மீண்டும் சாதித்த டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்துள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைதிப்படைக்கு தங்கள் ராணுவத்தை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும், காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸுக்கும் இடையே கடந்த 2013ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர். நான் அமெரிக்கா அதிபர் ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார். அதனை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சம்மதிக்க வைத்த ட்ரம்ப் அரபு நாடுகள் மூலம் ஹமானஸயும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் எகிப்தில் வைத்து சர்வதேச தலைவர்கள் கலந்துகொள்ள ட்ரம்ப் முன்னிலையில் இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 20அம்ச அமைதி திட்டங்களை கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி காசாவின் பாதுகாப்பு பல்வேறு நாடுகளின் படைகளால் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு அரபு நாடுகளும் தங்கள் சார்பில் படைகளை அனுப்ப வேண்டும் என ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பாகிஸ்தானும் தங்கள் படையை காசாவுக்கு அனுப்பவேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

வெளியில் இருந்து பார்த்தால் இது வேறும் வேண்டுகோளாக தெரிந்தாலும், இது பாகிஸ்தானுக்கு ட்ரம்பிட்ட உத்தரவாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காசாவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்ட சர்வதேச படையில் சேர பாகிஸ்தான் தயாராகவுள்ளது என்று துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறியுள்ளார். ஆனால் காசாவுக்கு பாகிஸ்தான் படைகளை அனுப்ப அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டிரம்பின் இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு ஆதரவானது என்று பாகிஸ்தானின் பல்வேறு கட்சிகளும் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் அமெரிக்க உதவியை சார்ந்து இருக்கும் நிலையில், அந்நாட்டு கோரிக்கையை பாகிஸ்தானால் மீற முடியாது. ஒரு வேலை மீறினால் அமெரிக்க பதிலடி பாகிஸ்தானுக்கு பல்வேறு விதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே வேறு வழியின்றி அமெரிக்காவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. அதே நேரம் ஹமாஸ் அமைப்பு ஆயுத்தைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நீக்கவேண்டும் என்றும் பாகிஸ்தான் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

Tags : TRUMP ,PAKISTAN ,AMERICA ,Washington ,Pakistani government ,US ,International Peacekeeping Force ,Israel ,Hamas ,Gaza ,
× RELATED 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப்...