கரூர்: கரூர் மாவட்டம், புகளுர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாய்க்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 30.12.2025 முதல் 28.02.2026 வரையிலான 61 நாட்களுக்கு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 210.82 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
