×

பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு விமர்சனம்

 

சென்னை: எங்கள் கட்சி களத்தில் இல்லை எனச் சொல்ல எவ்வளவு தைரியம்?, நாவை அடக்கி பேச வேண்டும் என களத்தில் இல்லாதவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை என கூறிய விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார். தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம்; எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஒரே சந்திரன்… ஒரே எம்ஜிஆர்தான் என்று கூறினார்.

Tags : Nayandara ,Cellur Raju ,Vijay Chennai ,Vijay ,
× RELATED பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி...