- பாஜக
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- தினம்
- அகில இந்திய காங்கிரஸ் கட்சி
- சத்தியமூர்த்தி பவன்
- ராயப்பேட்டை, சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- காங்கிரஸ்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 140வது தொடக்க நாள்விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது 125 அடி உயர் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம கூறியதாவது:
மாபெரும் தலைவர்கள் உருவாக்கிய பேரியக்கம் நாட்டுக்காக எவ்வளவோ நியாகங்களை செய்துள்ளது. பலரது தியாகங்கள் இன்றும் நாடு முழுவதும் சுடர்களாக கொழுந்து விட்டு எரிகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தலைவர்கள் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளார்கள். அவர்களை எல்லாம் மறைத்துவிட்டு விடுதலை போராட்ட வரலாற்றை எழுத முடியாது. 1885 டிசம்பர் 28ம் தேதி தொடங்கப்பட்டது காங்கிரஸ் கட்சி.
140 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்தியாவின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்துவருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி கொள்கை இருக்கிறது. குறிப்பாக மதச்சார்பின்மையோடு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால் அதை சிதைத்து நாட்டின் ஆன்மாவாக இருக்கும் சட்டத்தையும் சிதைத்து பாஜ இந்த நாட்டில் யார் இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்போம் என்கிறது.
இந்த பாசிச சக்திகளை ஒழிக்க ஜனநாயக சக்திகள் கை கோர்த்து செயல் பட வேண்டும். காங்கிரசை பொருத்தவரை வாக்கு வங்கி அரசியல் கிடையாது. ஒரு போதும் அதில் ஈடுபடாது. ஆனால் பாஜ கட்சி ஓட்டு பெட்டியை நம்பி இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலை செய்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து விடப் போவதில்லை.
அது மக்கள் மத்தியில் தொடர்ந்து எழுச்சியோடு இருக்கும். சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. அவர்களுக்காக பாஜ நீலி கண்ணீர் வடிக்கிறது. ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு அவர் பேசி னார்.
